பதிவு செய்த நாள்
09
ஜூன்
2014
02:06
கும்பகோணம்: நாச்சியார்கோவில், ஆகாசமாரியம்மன் கோவில் பெரிய திருவிழாவில், ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனையை நிறைவேற்றி வழிபட்டனர். கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில், ஆகாச மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 28ம் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 30ம் தேதி இரவு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், திருநரையூர் செங்கழுர் விநாயகர் கோவிலிருந்து, அம்பாள் ஆலயம் வரும் கழ்ச்சி நடந்தது. அன்று முதல், அம்பாள் வீற்றிருந்த திருக்கோலம், தஞ்சாவூர் மகாராஜாவால் விருது அளிக்கப்பட்ட லெட்சுமி அலங்காரம், சரஸ்வதி அலங்காரம், மதனகோபால அலங்காரம், மகிஷாசுரமர்த்தினி, சேஷசயனம் என, தினம் ஒரு அலங்காரத்தில் அம்பாள் காட்சியளித்தார். விழா நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாளை தரிசித்து சென்றனர். நேற்று, அம்பாள் அந்தம் வரை வளர்ந்து ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்துடன் சேவை ஸாதித்து, அருந்தீபம் எற்றும் கழ்ச்சி நடந்தது. நேற்று காலை முதல் பெரிய திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு காவடி, பாடை காவடி, தொட்டில் கட்டுதல், அங்கபிரதட்சணம் என பிராத்தனைகளை நிறைவேற்றி அம்பாளை வழிபட்டனர். விழா நாட்களில், பல்வேறு கலை கழ்ச்சிகள் நடந்தது. வரும், 11ம் தேதி இரவு தேரில் அம்பாள் சமயபுரத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.