மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள ஸ்ரீராம பக்த ஆஞ்சனேய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 7ம் தேதியாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. 8ம் தேதி காலை 6 மணிக்கு மகா பூர்ணாஹூதி முடிந்து 8 மணிக்கு கடங்கள் புறப்பட்டது. 9:30 மணிக்கு ஸ்ரீ ராம பக்த ஆஞ்சனேய சுவாமி சன்னதி விமானத்திற்கு மகா சம்புரோக்ஷணம், தீபாராதணை மற்றும் சாற்றுமறைகள் நடைபெற்றது. தொடர்ந்து இதே கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சனேய சுவாமிக்கு மகா சம்புரோக்ஷணம் நடைபெற்றது. முன்னதாக ஆஞ்சனேயர் கோயிலுக்கு அருகில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சக்தி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகங்களை சர்வசாதகம் திருநாங்கூர் வேதராஜன் மற்றும் மணலுõர்பேட்டை சிவஸ்ரீ அருணாசலகுருக்கள் ஆகியோர் செய்து வைத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சீனுவாசன் தலைமையில் நகரவாசிகள் செய்திருந்தனர்.