பதிவு செய்த நாள்
09
ஜூன்
2014
02:06
கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேசுவர ஸ்வாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. கும்பகோணம், ஆதிகும்பேசுவர ஸ்வாமி கோவிலில், மங்களாம்பிகை உடனாய ஆதிகும்பேசுவர ஸ்வாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, 7மணிக்கு அம்பாளின் தவக்கோலம் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 8 மணிக்கு சிவபெருமான் காட்சியளித்தலும், இரவு, 9 மணிக்கு அம்பாளுக்கும், ஈசனுக்கும் நிச்சயதாம்பூலமும் நடைபெற்றது. நேற்று காலை, சிறப்பு அலங்காரத்தில் மங்களாம்பிகை அம்மனும், ஆதிகும்பேஸ்வரரும் எழுந்தருளினர். பின்னர் சீர்வரிசை எடுத்து வருதல், மாப்பிள்ளை அழைப்பு, ஊஞ்சலில் நலுங்கு காணுதல் நடைபெற்றது. தொடரண்ந்து திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். நேற்றிரவு, 7 மணிக்கு ஸ்வாமி வெளிப்பிரகார உலா நடந்தது. இன்று (9ம்தேதி) இரவு, திருமண மறைச்சடங்கு, நலுங்கு ஊஞ்சல் மற்றும் இரவு, பெரிய பிரகாரத்தில் உலாப்போந்து காட்சியளித்தல் நடைபெறுகிறது. வரும், 12ம்தேதி ஸ்வாமி அம்பாளுடன் புறப்பாடு செய்து, கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள சங்கரமடத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது. 13ம் தேதி, மகாசுத்தாபிஷேகத்துடன் விழாநிறைவடைகிறது.