திருச்செந்தூர் இலைவிபூதி போன்று திருத்தணியிலும் ஒரு சிறப்பு உண்டு. அது, சந்தனப் பிரசாதம். இங்கே அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கும், ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் சாதாரண சந்தனத்தைப் பூசுவதில்லை. முருகக் கடவுளுக்கு இந்திரன் காணிக்கையாகத் தந்த சந்தனக் கல்லில் அரைக்கப்படும் சந்தனத்தையே சாத்துகிறார்கள். இந்தச் சந்தனம் பக்தர்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. இதை வாங்கிச் செல்லும் பக்தர்கள், இதை நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்துக் குடிக்கிறார்கள். இதனால் பல நோய்களும், குறிப்பாக கண் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. விழாக்காலங்களில் மட்டுமே இந்த அரிய அற்புதச் சந்தனம் கிடைக்கும்.