தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் திருவெறும்பூருக்குத் தென்கிழக்கே எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. சோழமாநகர் என்ற கிராமம். இங்குள்ள ஆலயத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் அன்னை ராஜராஜேஸ்வரி. இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று சிறப்பு பூஜை நடைபெறும். அப்போது பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை ஒரு சீட்டில் எழுதி, சுவாமி பாதங்களில் வைத்து அவற்றை நிறைவேற்றக் கோரி பிரார்த்தனை செய்கிறார்கள். அப்படிச் செய்வதால், அந்த பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.