Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைகாசி விசாக திருவிழா: ராமநாதபுரம் ... பெருமாள்மலை பிரம்மோற்ஸவ தேரோட்டம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2014
03:06

சிவகங்கை : நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில், வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் கண்நோய் தீர்க்கும் கண்கண்ட தெய்வம் என, அனைத்து பக்தர்களாலும் பிரசித்தி பெற்றது கண்ணுடைய நாயகி அம்மன் கோயில். இங்கு, கண் நோய் நீங்கவேண்டி, கண்மலர் நேர்த்தி செலுத்தினால், உடனே நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. அதே போன்று பிள்ளைவரம் வேண்டுவோரின் நேர்த்தியும் நிறைவேறியுள்ளது.

வைகாசி தேரோட்டம்: இச்சிறப்பு பெற்ற கோயிலில் வைகாசி விழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். ஏழாம் நாள் விழாவில் தங்கரதம்; எட்டாம் நாளில் வெள்ளி ரத புறப்பாடு நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று, காலை 10:15 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் கண்ணுடைய நாயகி அம்மன் எழுந்தருளினார். அதை தொடர்ந்து, சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர், பக்தர்கள் தேர் வடம் பிடிக்க, தேரோட்டம் நடந்தது. முன்னதாக, மூஷிக வாகனத்தில் விநாயகர் தனி சப்பரத்தில் எழுந்தருளினார். தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி, நேற்று பகல் 12:30க்கு நிலையை அடைந்தது. 10ம் நாளான இன்று, காலை10:30 மணிக்கு, அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar