திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே கூத்தாண் டவர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெண் ணைவலம் கூத்தாண்ட வர் கோவிலில் கடந்த 27ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வைகாசி பெருவிழா துவங்கியது. கடந்த 3ம் தேதி இரவு 9:00 மணிக்கு சுவாமி ஆஸ்தா னத்திலிருந்து ஊருக்குள் எழுந்தருளினார். 4ம் தேதி மகாபாரதம் துவங்கியது. தினமும் சுவாமி வீதியு லாவும், 9ம் தேதி மூன்றாம் காப்பு கட்டுதலும் நடந்தது. 10ம் தேதி இரவு 9:00 மணிக்கு சுவாமிக்கு கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு எல்லை மரியாதை பெற்று வருதல் நிகழ்ச்சி, காலை 6:30 மணிக்கு தேரோட் டம் நடந்தது. முக்கிய வீதிகளின் வழியே மதியம் 12 மணிக்கு பந்தல டிக்கு தேர் சென்றடைந் தது. பயிரிடப்பட்ட கரும்பு வயல்களின் வழியே தேர் இழுத்தனர். மாலை 5:00 மணிக்கு அழிகளம் நிகழ்ச்சியில் அரவாண் களப்பலியும், 5:30 மணிக்கு தீமித்தலும் நடந்தது. பின், இரவு 7:00 மணிக்கு காளி கோவிலில் அரவாண் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (12ம் தேதி) காலை 9 மணிக்கு தர்மர் பட்டாபி ஷேகமும், மஞ்சள் நீராட் டும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா கண்ணன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.