Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய ... மேல்நெல்லி இலந்தியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; செய்யார் ஆற்றிலிருந்து புனித நீர் மேல்நெல்லி இலந்தியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வாருங்கள் ஹிந்து முன்னணி அழைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வாருங்கள் ஹிந்து முன்னணி அழைப்பு

பதிவு செய்த நாள்

31 அக்
2025
11:10

திருப்பூர்: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வருமாறு, ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.


இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை: கார்த்திகை தீபத்திருவிழா தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க விழா. முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது. இரண்டாம் உலகப் போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது. அதனால், கோயில் முன் புறம் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறவில்லை. மலை மீதுள்ள தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, ஹிந்து முன்னணி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மறைந்த ஹிந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நடத்திய சட்டப் போராட்டம் இதற்கான தீர்ப்பைப் பெற்றுத் தந்தது. ஆனால், தீர்ப்பு வந்து பல ஆண்டுகளாகியும் கோயில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வழிபாடு நம் உரிமை; நீதிமன்ற மும் சட்டப்படி அதை உறுதி செய்துள்ளது. தீபத் துாணில் தீபம் ஏற்றுவதை கோயில் நிர்வாகம் பின் பற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதை மாற்றும் வகை யில், வரும் திருக்கார்த்திகை தினத்தில் திருப்பரங் குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றி வழிபட, முருக பக்தர்கள், அடியார்கள், ஆன்மிக குழுவினர், பாத யாத்திரை, காவடி குழுவினர் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar