|  
     மேல்நெல்லி இலந்தியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; செய்யார் ஆற்றிலிருந்து புனித நீர்
                                        
      
                    
பதிவு செய்த நாள்31
அக்2025
 12:10
 சென்னை;  இராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், மேல்நெல்லி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க சுமார் 500 ஆண்டு தொண்மையான இலந்தியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது.கிராம தேவதை மற்றும் இஷ்ட தெய்வமாகவும், குலதெய்வமாகவும், தாய் தெய்வமாகவும், அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்னம் அருள்பாலிக்கும், கருணையே வடிவமாக விளங்ககூடிய அருள்மிகு ஸ்ரீ இலந்தியம்மன் கோவிலில், விநாயகர், பாலமுருகர், ப்ராம்மி, வைஷ்ணவி, மாதேஸ்வரி, சாமுண்டி மற்றும் துர்கா தேவி ஆகிய பரிவார மூர்த்தங்கள் சூழ கோவிலில் சித்திர வேலைகளும் எழில்மிகு பஞ்சவர்ண வேலைகளும் நிறைவடைந்த நிலையில் வரும் நவ.,3ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக இன்று சேராம்பட்டு, செய்யார் ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, தீர்த்த சங்க்ரஹனம் நடைபெற்றது. நாளை காலை மங்கள இசை, திருமுறை பாராயணம், வேதபாராயணம், கோ-பூஜை, தேவதா அனுக்ஞை, ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, புன்யாஹவசனம், தன பூஜை, நவகிரக பூஜை, கணபதி ஹோமம், மஹாலக்ஷ்மி ஹோமம், நவகிரக ஹோமம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, மஹா பூர்ணாஹுதி, உபசார பூஜைகள், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷோக்ன ஹோமம், மஹாலக்ஷ்மி பூஜை. கருங்கல்லால் செய்யபட்ட நூதன விக்கரஹங்கள் கரிகோல ஊர்வலம் நடைபெறும்.முதல் கால யாக பூஜை : நாளை நவ.,1ம் தேதி மங்கள இசை, திருமுறை பாராயணம், வேத பாராயணம், எஜமானார், அனுக்ஞைஸ்ரீ, விக்னேஸ்வர பூஜை. புண்யாஹவசனம், மருதயுசங்கிரஹனம். அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை ப்ரவேசம், முதல்கால யாக பூஜை விசேஷ திரவ்ய ஹோமம்.மஹா பூர்ணாஹுதி, உபசார பூஜைகள். தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற உள்ளது. ஐப்பசி மாதம் 16-ம் நாள் (02.11.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மங்கள இசை, திருமுறை பாராயணம், வேத பாராயணம், எஜமானார் அனுக்ஞை. ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவசனம், விசேஷ மண்டப பூஜைகள், விசேஷ திரவ்யஹோமமும், ஐப்பசி மாதம் 17-ம் நாள் (03.11.2025) திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, மங்கள இசை, திருமுறை பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவசனம், பூத சுத்தி, பஞ்சகவ்ய பூஜை, மண்டப பூஜை, பிம்ப சுத்தி, நாடிசந்தானம், பிம்பரக்ஷா பந்தனம், ஸ்பர்சாஹுதி, தத்துவார்ச்சனை விசேஷ திரவ்ய ஹோமத்தை தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு யாத்ரா தானம், மஹா பூர்ணாஹுதி, உபசார பூஜைகள். மஹா தீபாராதனை, கலச புறப்பாடு நடைபெற உள்ளது. தொடர்ந்து காலை 10.00 மணிக்கு விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். |