பதிவு செய்த நாள்
12
ஜூன்
2014
03:06
காரிமங்கலம்: காரிமங்கலம் அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக்கோவிலில், பவுர்ணமி கிரிவலப்பூஜை இன்று நடக்கிறது.காலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. மாலையில் நடக்கும் கிரிவலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் வருகின்றனர்.தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பவுர்மணியை முன்னிட்டு, காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம் நடக்கிறது. மாலையில் கிரிவலம், அன்னதானம் நடக்கிறது. காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு, இன்று காலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மாலையில் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.பாலக்கோடு பால்வண்ணநாதர், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், அடிலம் அடிலநாதர் கோவில் ஆகியவற்றில் இன்று காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.