நத்தம் : நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் குருப் பெயர்ச்சியை முன்னிட்டு நாளை சிறப்பு யாகமும், பரிகார பூஜையும் நடைபெறுகிறது.நவக்கிரகங்கள் அமைந்துள்ள சிவ ஸ்தலங்களில் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தனி சிறப்பு பெற்றுள்ளது. இங்கு, நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் இருப்பர். திருக்கணித பஞ்சாங்கப்படி நவகிரகங்களில் முதன்மையான குரு, மிதுனத்திலிருந்து கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதற்காக சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. பக்தர்கள், தங்கள் ராசிக்கேற்ற வாறு பரிகாரம் செய்துகொள்ளலாமென கோயில் சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர். ஏற்பாடுகளை கோயில் அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.