நடராஜருக்கு சிலை எதுவும் இல்லாமல் சித்திரத்தால் வரையப்பட்ட உருவத்தை வணங்கும் வகையில் குற்றாலத்தில் சபை எழுப்பப்பட்டுள்ளது. இதை சித்திர சபை என்பர். நடராஜரின் பஞ்ச சபைகளால் இதுவும் ஒன்று. மூலிகைகளால் இந்த சித்திரம் வரையப்பட்டுள்ளது.அதே போல் குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் சுவாமி கோயிலும் சங்கு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். சங்கு வடிவக் கோயில் தமிழகத்தில் வேறெங்கும் இல்லை எனலாம்.