சிவபெருமான் படைத்தல் முதலான தொழில்களைச் செய்ய தோற்றுவித்த திருமேனியே பைரவ மூர்த்தி ஆவார். இவர் எட்டு அம்சங்களைக் கொண்டு அஷ்டபைரவராகத் திகழ்கிறார். நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு, சூரியன், சந்திரன், ஆத்மா என்னும் அஷ்ட சக்திகளைக் கொண்டு உலகினை இயக்குகிறார். தேய்பிறை அஷ்டமியிலும், ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலும் இவரை வழிபாடு செய்தால் சிறந்த பலன்களைப் பெறலாம். எதிரிகளை அழிப்பதிலும், நினைத்ததை அருள்வதிலும் பைரவர் ஈடு இணையற்றவர். சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள எட்டு சிவாலயங்கள், அஷ்ட பைரவர் தலங்களாகக் கருதி வழிபடப்படுகிறது. மதுரை கீழ ஆவணி மூல வீதியில் பைரவருக்கு கோயில் இருக்கிறது. சேலம் மாவட்டம், ஆறகழூரில் ஒரே கோயிலில் அஷ்ட பைரவர்களை தரிசிக்கலாம்