சபரிமலை:ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை (ஜூன் 14) மாலை திறக்கப்படுகிறது; ஜூன் 19 இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.சபரிமலை ஐயப்பன் கோயில், தமிழ் மாதத்தில் முதல் ஐந்து நாட்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும். ஆனி மாத பூஜைக்காக (ஜூலை) மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றுவார். மற்ற பூஜைகள் நடக்காது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.ஜூன் 15 (ஆனி 1) அதிகாலை 5 மணிக்கு நடை திறந்து, நிர்மால்ய தரிசனத்துக்கு பின் நெய்யபிஷேகம் தொடங்கும். ஜூன் 19 வரை தினமும் உதயாஸ்தமன பூஜை, படிபூஜை, நெய்யபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜைகள் நடக்கும். ஜூன் 19 இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.பின், ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16 மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும்.