பதிவு செய்த நாள்
14
ஜூன்
2014
01:06
கள்ளக்குறிச்சி : விருகாவூரில் சர்க்கரை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
வேதசிவாகம முறைப்படி நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரில் சர்க்கரை
விநாயகர், சீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள், சிவசக்தி அம்மன்
கோவில்கள் திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேக பெருவிழா இரு நாட்கள்
நடந்தது. விநாயகர் வழிபாடு, அனுக்ஞை, புன்னியாவஜனம், பிரவேச பலி,
அங்குரார்பனம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம் நடந்தது.அரச மரத்தடி பாம்பு
புற்று அடிமஞ்சள் எடுத்து வந்து, சிறப்பு பூஜைகள் செய்து, முலைப் பாலிகை
இட்டனர்.நேற்று முன்தினம் இரவு 3 கோவில்களிலும் மூலஸ்தான தெய்வங்கள்
பிரதிஷ்டை செய்தனர். யாக சாலை பூஜை நடந்தது. நேற்று காலை விசேஷ பூஜைகள்
செய்து ராஜாஜி சுவாமிகள் முன்னிலையில் கோவில் கோபுரங்களுக்கு புனித
நீரூற்றி காலை 8:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.நவீன அரிசி ஆலை
சங்கத்தினர், ரோட்டரி சங்கத்தினர், அரிமா சங்கத்தினர், அனைத்து வியாபாரிகள்
சங்கத்தினர், கிராம மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை
விருகாவூர் ஊர் மக்கள், துளுவ வேளாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.