நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கோவில்களில் குரு பெயர்ச்சி பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. குரு பகவான் என அழைக்கப்படும் தட்சணாமூர்த்தி நவகிரக குருவும் சிறப்பு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை குமார், ஹரி குருக்கள் செய்தனர். வரசித்தி விநாயகர் ÷ காவில், கைலாசநாதர் கோவில், திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவில்களிலும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.