சைவ சித்தாந்த மன்றம் சார்பில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2014 02:06
புதுச்சேரி : லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி சைவ சித்தாந்த பெருமன்றம், முதலியார்பேட்டை அண்ணாமலையார் கிரிவலக்குழு, திடீர் நகர் திருகண்டீஸ்வரர் ஆலயம் மற்றும் இசைத்திருக்கூட்டம் ஆகியன இணைந்து, திருவாசக முற்றோதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, பழனிபாட்டி (எ) ராஜம்மாள் சங்கரன் முன்னிலை வகித்தார். திருக்கழுக்குன்றம் சிவ. தாமோதரன் தலைமையில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சைவ சித்தாந்தப் பெருமன்றம் உள்ளிட்ட அமைப்பினர் செய்திருந்தனர்.