பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
02:06
நாமக்கல்: உலக மக்களின் நன்மை வேண்டியும், நாட்டில் அமைதி நிலவ வேண்டியும், நாமக்கல் ஐயப்பன் கோவிலில், கோமாதா சிறப்பு பூஜை நடந்தது. தே.மு.தி.க., வக்கீல் பிரிவு செயலாளர் வேலு தலைமை வகித்தார். பாரதீய கிசான் சங்க மாவட்டத் தலைவர் நமச்சிவாயம், நகரச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் நவலடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவேகானந்தா குருகுல நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர் ஸ்ரீமத் பூர்ண சேவானந்தா மகராஜ், அகத்தியர் புற்றுநோய் ஆராய்ச்சி மைய நிர்வாகி கருணா ஸ்வாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர். கோமாதா பூஜையில், மாடுகளுக்கு பொட்டு வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் பங்கேற்று கோமாதாவை வழிபட்டனர். ஏற்பாடுகளை, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பாரதீய கிசான் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.