பதிவு செய்த நாள்
16
ஜூன்
2014
02:06
நகரி : வேதநாராயண சுவாமி கோவிலில், நான்கரை மாதத்தில், பக்தர்கள், 4.73 லட்சம் ரூபாய், உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர். சித்துார் மாவட்டம், நாகலாபுரம் கிராமத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேத நாராயண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.மேலும், பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை தீர்க்க அங்குள்ள உண்டியலில் பணத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர். கடந்த பிப்., 1ம் தேதி முதல், இம்மாதம், 12ம் தேதி வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் கோவில் அதிகாரி லோகநாதரெட்டி முன்னிலையில் திறக்கப்பட்டது.தொடர்ந்து கோவில் ஊழியர்களால் பணத்தை பிரித்து எண்ணப்பட்டது. இதில், நான்கரை மாதத்தில், 4,73,090 ரூபாய் ரொக்கம் கிடைத்தது.