Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆனி முகூர்த்த நாட்கள்! இவரை வழிபட்டால் குழந்தை பாக்யம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நிஜமான நைவேத்யம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2014
03:06

ஒருமுறை காஞ்சி சங்கர மடத்தில் பக்தர் ஒருவர் பெரியவரிடம் அதிதி போஜனத்தின் (முன்பின்தெரியாதவர்களுக்குஉணவளித்தல்) பற்றிச் சொல்லும்படி வேண்டிக் கொண்டார். வீடு தேடி வருபவரே அதிதி. அவரது பசியைப் போக்குவது தான் அதிதி போஜனம். மோட்ச கதிக்கே அழைத்துச் செல்லும் மகிமை இதற்கு <உண்டு. யாரும் இதைச் செய்யலாம். அப்படி வாழ்ந்த தெய்வீகத் தம்பதி கும்பகோணத்தில் இருந்தார்கள். அவர்களைப் பற்றி இப்போ சொல்கிறேன் என்றார். அவர் சொன்னதின் சாராம்சம் இதோ!கும்பகோணத்தில் குமரசேன் செட்டியார் மளிகை வியாபாரம் செய்து வந்தார். அவருடைய மனைவி சிவகாமி ஆச்சி. குழந்தையில்லாத இந்ததம்பதி வீட்டில் தினமும்ஒருவருக்காவது அன்னமிட்டு அதிதி போஜனம் செய்துவந்தனர். ஒருநாள் அடைமழை பெய்ததால், தெருவில் ஒருவர் கூட தென்படவில்லை.செட்டியார் மகாமக குளத்துப் பக்கம் போய் சிவனடியார் ஒருவரை சாப்பிட அழைத்து வந்தார். தம்பதி சமேதராக அடியாரை வணங்கி விட்டு, அவர் விரும்பும் உணவைச் சமைப்பதாகக் கூறினர். அவரோ முளைக்கீரையும், கீரைத்தண்டு சாம்பாரும் போதும் என தெரிவித்தார். கொல்லையில் செட்டியார் கீரை பறிக்கப் புறப்பட்டார்.அடியவரும்அவருக்கு உதவும் நோக்கில் உடன் சென்றார். இருவரும் ஆளுக்கொரு தட்டாகக்கீரையைக் கொடுத்தனர்.சிவகாமி ஆச்சி இரண்டையும் தனித்தனியாக அலசி விட்டு, தனித்தனி பாத்திரத்தில் வேக வைத்தார். சிவனடியார் கொடுத்த கீரை வெந்ததும், பூஜையறைக்கு எடுத்துச் சென்று சிவனுக்கு நைவேத்யம் செய்தார். கீரை பிரசாதத்துடன் அடியவருக்கு சோறிட்டார். அவரும் அதை விருப்பத்துடன் சாப்பிட்டார். இருந்தாலும், மனதிற்குள், தன்னுடைய கீரையை மட்டும் தனியாக சமைத்து நைவேத்யம் செய்தது ஏன் என்ற சந்தேகம் அதிதிக்கு எழுந்தது.ஆச்சியிடமே அதைக் கேட்டும் விட்டார். செட்டியார் கீரை பறித்தபோது சிவ சிவ என நாமம் ஜெபித்தபடி பறித்ததால், அப்போதே சுவாமிக்கு நைவேத்யமாகி விட்டது. சிவநாமம் சொல்லாததால், அதிதி பறித்த கீரையைத் தனியாக நைவேத்யம் செய்ததாக தெரிவித்தார். இதைக் கேட்ட சிவனடியார் வியப்பிலும் வெட்கத்திலும் ஆழ்ந்து, ஏதும் சொல்லாமல் மவுனமாகப் போய்விட்டார். இப்படி அதிதி போஜனமே குறிக்கோளாக வாழ்ந்த அந்த சிவகாமி ஆச்சி, ஒரு மாசி மகாசிவராத்திரி நாளில் விரதம்இருந்து, கும்பேஸ்வரரைத் தரிசித்து விட்டு வந்தார். பூஜையறையில் சிவநாமம் ஜெபித்தபடி கீழே சாய்ந்தார். உயிர் பிரிந்து சிவன் திருவடியில் கலந்தார். பதறிப்போன குமரேசன் செட்டியாரும் சிவகாமீ என்ற சொல்லியபடி கீழே சாய்ந்தார். அவரது உயிரும்சிவனருளோடு கலந்தது.சிவ சாயுஜ்ஜியம்(முக்திநிலை) என்னும் உயர்கதியை அடைய இந்த அதிதிபோஜனம் செய்த புண்ணியமே காரணம். ஒவ்வொரு மகாசிவராத்திரி நாளன்றும், குமரேசன் செட்டியார், சிவகாமி ஆச்சி தம்பதி நினைப்பு எனக்கு வந்து விடும், என்று நெகிழ்ச்சியுடன் கூறுவார் மகாபெரியவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar