முன்னொரு காலத்தில் சார்வாங்கன் என்பவன் தன் கடமைகளை மறந்து, தான் செய்த வியாபாரத்தில் பல தவறுகள் புரிந்து, கூடா ஒழுக்கம் கொண்டு வாழ்ந்து வந்தான். ஒரு கட்டத்தில் குடும்பத்தை விட்டுப் பிரிந்து களவுத் தொழிலிலும் ஈடுபட்டான். இறுதியாக விந்திய மலைச் சாரலில் உயிர் துறந்தான். அவனை யம கிங்கரர்கள் பாசக் கயிற்றால் பற்றி இழுத்து யமலோகத்திற்குக் கொண்டு செல்ல முற்பட்டபோது, சிவகணங்கள் அவர்களைத் தடுத்தனர். இவ்வுயிரை கைலாயத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறோம் என்றனர். யமனின் துõதுவர்களோ, இவன் மகாபாபி என்றனர். அதற்கு சிவகணங்கள், இவன் வாழ்ந்த முறை ஒழுங்கீனமானதாக இருக்கலாம். ஆனால் இவன் இறந்த இடத்திலிருந்து பத்து முழ தொலைவில் ஒரு ருத்ராட்ச மரம் உள்ளது. அந்த மரத்தின் அதிர்வலைகள் இவனை புண்ணியவானாக்கிவிட்டது. எனவே, இவனுக்கு சிவலோகப் பதவி கிட்டியது! என்றனர். அப்படிப்பட்ட சிறப்பு, ருத்ராட்சத்திற்கு உண்டு. சிவனின் வலது கண்ணிலிருந்து மஞ்சள் நிற ருத்ராட்சங்கள் பன்னிரண்டும், இடது கண்ணில் இருந்து வெண்ணிற ருத்ராட்சங்கள் பதினாறும், நெற்றிக் கண்ணிலிருந்து கருப்பு வண்ண ருத்ராட்சங்கள் பத்தும் வெளிப்பட்டன.
ருத்ராட்சத்திற்கு தனி சிறப்புக்கள் உண்டு
இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.
தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டிருக்கிறது.
மருத்துவ குணங்கள் நிறைய உண்டு.
ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் அதைச் சுற்றி உண்டாகும் ஒளி சக்தி வட்டம் நம் உடலை துõய்மையாக்குகிறது. இந்த ஒளி வட்டம் அவரவர் உடல் நிலை மற்றும் மனநிலையைப் பொறுத்து அமையும்.
ருத்ராட்சத்தில் ஒன்று முதல் பல முகங்கள் உள்ளன. எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்க வல்லவை. ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. இது மலைப் பிரதேசங்களில் காய்க்கிறது. இது நேபாள நாட்டில் இயற்கையாகக் கிடைக்கிறது. சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராட்சம். சூரியன் எப்படி தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவாக்கியதோ அது போல ருத்ராட்சம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதையும் கட்டுப்பாட்டில் வைக்கும் சக்தி கொண்டது.