ஐந்து முக ருத்ராட்சம் வியாழன் கிரகத்தால் ஆளப்படுகிறது. ஐந்து முக ருத்ராட்ச மாலை அணிந்தால் உடல் நலம் மற்றும் அமைதி ஏற்படும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதய நோயைக் குணப்படுத்தும். பிறந்த குழந்தை முதல் யார் வேண்டுமானாலும் இந்த ருத்ராட்சம் அணியலாம். ஐந்துமுக ருத்ராட்சத்தை கிரகஸ்தர்கள் பயன்படுத்தலாம். ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் உடல் ஆரோக்கியம் தரும். ஆண், பெண் பேதமின்றி எல்லோரும் அணியலாம். இது ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, மன அமைதியையும், சுறுசுறுப்பையும் தரும். சீரான இரத்த ஓட்டம், கால் மரத்துப் போகாமல் இருக்க ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தை சிறு துளி இழைத்து உள்ளுக்குச் சாப்பிடும்போது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடுவது கூடாது. ஆண்கள் தொண்டைக் குழியில் ருத்ராட்சம் இருப்பது போல், கழுத்தில் ருத்ராட்சம் கட்டுவது நல்லது. இதனால் ஆண்களின் ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். துடிப்பு இல்லாமல் சோர்வுடன் இருக்கும் பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆறுமுக (ஷண்முகி) ருத்ராட்சம் நல்ல பலனை அளிக்கும்.