அய்யாவாடியில் நிகும்பலா யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2014 04:06
மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பானது. இந்த யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை தரிசித்தால் சத்ரு உபாதைகள் நீங்கும். ஆனி மாத அமாவாசையில் காலை ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் 12:30 மணிக்கு தண்டபானி குருக்கள் யாகத்தில் மிளகாய் வற்றலை கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசித்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். கும்பகோணத்திலிருந்து அய்யாவாடிக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டன. நாச்சியார்கோயில் போலீஸ் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர்.