லக்னோ: பண்டிகை மாதத்தையொட்டி, வட மாநிலங்களில் உள்ள அயோத்தி, மதுரா மற்றும் காசி ஸ்தலங்களுக்கு உத்தர பிரதேச மாநில போலீஸ் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெனரல் அம்ரீந்திரா செங்கர் கூறுகையில், புலனாய்வு துரை ஏஜென்சியின் தகவலின்படி, மதுரா காசி மற்றும் அயோத்திக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.