சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் சுவாமி கோவிலில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவம், ஜூன் 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. நாளை, காலை 6 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து வடம் பிடித்து தேரோட்டம் நடக்கிறது. 4ம் தேதி அதிகாலை மகா அபிஷேகம், ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு பூஜைகள், மதியம் ஆனித் திருமஞ்சன உற்சவம் நடக்கிறது.