பதிவு செய்த நாள்
03
ஜூலை
2014
03:07
சிங்கம்புணரி : முறையூர் மீனாட்சி- சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா சிறப்பு பூஜை, கொடிவளைதல், காப்புக் கட்டுடன் நேற்று துவங்கியது. தினமும் பஞ்சமூர்த்திகள் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.பகலில் கேடயத்திலும், இரவில் ரிஷபம், அஸ்வம், அன்னம், காமதேனு, புஷ்பபல்லக்கு வாகனங்களில் திருவீதி உலா நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியாக, ஜூலை 7ல் சமணர் கழுவேற்றம்,9 ல் சுவாமி திருக்கல்யாணம்,10 ல் தேரோட்டம்,கலை,இசை நிகழ்ச்சி நடக்கிறது.