ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் கோயிலில் ஆனி சுவாதி நட்சத்திரத்தை யொட்டி, ஜூலை 7ம் தேதி மங்களாசாசனம் நடக்கிறது. பத்து நாட்கள் நடக்கும் விழாவின் முதல் நாள் கொடியேற்றம், ஒன்பதாம் நாளன்று தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு கோயில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருவதால் கொடியேற்றம், தேரோட்டம் நடக்கவில்லை. இதனால் தினமும் காலை மண்டகப்படி மண்டபங்களில் சுவாமி எழுந்தருளலும், இரவில் வீதியுலாவும் நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை7ம் தேதி காலை தீர்த்தவாரி, மங்களாசாசனம் நடக்கிறது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.