அவிநாசி: பழங்கரை ஊராட்சி, பச்சாம்பாளையத்தில் முத்து விநாயகர், பாலதண்டாயுதபாணி மற்றும் ஸ்ரீராமர் கோவில்களில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, உத்தமபட்ச யாகசாலை (32 ஹோம குண்டங்கள்) அமைக்கப்பட்டு, ஆறு கால பூஜைகள் கடந்த நான்கு நாட் களாக நடந்தன. நேற்று அதிகாலை நிறைவு கால யாக பூஜைக்கு பின், கோவில் விமான கலசங்கள் மற்றும் மூலாலய மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மயிலாடுதுறை சிவபுரம் வேதாகம பாடசாலை முதல்வர் சுவாமி நாத சிவாச் சாரியார் தலைமையிலும், திருமுருகன்பூண்டி முத்துசிவசுப்பிர மணிய சிவாச்சாரியார் முன்னிலையி லும், கும்பாபிஷேக சர்வசாதக பூஜைகள் நடந் தன. விழாவை யொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.