Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளத்தீஸ்வரர் கோவிலில் திருமஞ்சனம்! மாயூரநாத சுவாமி கோயில் தேரோட்டம்! மாயூரநாத சுவாமி கோயில் தேரோட்டம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2014
12:07

காரைக்கால்: காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். இவரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உள்ளது. காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இத்திருவிழா கடந்த 10ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, நேற்று மாலை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. மணமகன் பரமதத்தர் பட்டாடை, நவமணி மகுடம், ஆபரணங்கள் அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். புனிதவதியார் பட்டுபுடவை உடுத்தி மணமகள் கோலத்தில் எழுந்தருளினார். பாரம்பரியபடி திருமண மேடையில் மாப்பிள்ளை வீட்டாருக்கும், மணமகள் வீட்டார் கவுரவிக்கப்பட்டு தாம்பூலம் மாற்றிக் கொணடனர். பின், யாகம் வளர்க்கப்பட்டு திருமணவிழாவிற்கான சடங்குகள் நடந்தது.

Default Image
Next News

காலை 10.15 மணிக்கு மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேதமந்திரங்கள் முழங்க புனிதவதியாருக்கு, பரமத்தர் திருமணம் நடந்தேறியது. ஆலய குருக்கள் புனிதவதியாருக்கு மாங்கல்யம் அணிவித்தார். பின், மகா தீபாராதணை நடந்தது. திருக்கல்யாண வைபவத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மாங்கல்யம், மஞ்சள், குங்குமம், மாங்கனியுடன் கூடிய தாம்பூல பை வழங்கப்பட்டது. திருகல்யாண வைபவத்தில் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், திருமுருகன்,வாரிய தலைவர்கள்  உதயக்குமார், சுரேஷ், எஸ்.பி.,பழனிவேல்,கோவில் நிர்வாக அதிகாரி மாணிக்கவாசகம் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரினசம் செய்தனர்.

நாளை (12ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு பிக்ஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு பரமதத்தர் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்பும் நிகழ்ச்சியும், 8 மணிக்கு நான்கு திசையிலும் வேதபாராயணம் எதிரொளிக்க பவழக்கால் விமானத்தில் சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் மாலையுடன் பிச்சாண்டவர் கோலத்தில் புறப்பாடு நடக்கிறது. பக்தர்கள் சுவாமிக்கு மாங்கனி வைத்து தீபாரதனை செய்து, பின் வீட்டின் மாடிகளின் இருந்து மாங்கனி வீசும் வைபவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar