பதிவு செய்த நாள்
12
ஜூலை
2014
12:07
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த நாகனம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சங்கனம்பட்டியில், தொப்பை மாரியம்மன், அக்கு மாரியம்மன், பள்ளத்து மாரியம்மன் மற்றும் வீரபத்ர ஸ்வாமி கோவில் திருவிழா ஆண்டுதோறும் பக்தர்களால் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கம் போல், இந்த ஆண்டு, கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவையொட்டி, சக்தி கரக ஊர்வலம், மாரியம்மன், வீரபத்ர ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில், பெண்கள் அதிகளவில் பங்கேற்று, பொங்கல் வைத்து, கூழ் ஊற்றி, ஸ்வாமியை வழிபட்டனர். தொடர்ந்து, வாண வேடிக்கையுடன், ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியாக, வீரபத்ர ஸ்வாமிக்கு, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியில், பக்தர்கள் தலையில், பூசாரி தேங்காய் உடைக்க, பக்தர்கள் பரவசமடைந்தனர். பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.