மாரியம்மனுக்கு ஆடிசெவ்வாய், வெள்ளியன்று கஞ்சி, கூழ் படைத்து வழிபாடு செய்வர். ஆடிக்கூழ் வார்த்தால் அம்மன் அருளால் நாடு செழிக்க மழை பெய்யும். விரதமிருந்து பெண்கள் வேப்பிலை சேலை உடுத்தி கோயிலை வலம் வந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலு த்துவர். அம்மனுக்கு மஞ்சப்பால் அபிஷேகம் செய்வர். மஞ்சள் கலந்த தண்ணீருக்கு ‘மஞ்சப்பால்’ என்பது பெயர். கன்னிப்பெண்கள் அம்மனுக்கு மஞ்சப்பால் அபிஷேகம் செய்ய விரைவில் திருமண யோகம் உண்டாகும்.