நட்சத்திரங்களில் முதலாவதாகக் கருதப்பட்டது கார்த்திகை. கார்த்திகை முதல் நட்சத்திரமாகவும் பரணி கடைசி நட்சத்திரமாகவும் இருந்தது. பி ற்காலத்தில் தான் ‘அசுவினி’ என மாறியது. கார்த்திகையை முதல் நட்சத்திரமாக கொண்டதற்கு காரணம் இருந்தது. அந்த நட்சத்திரத்திற்குரிய தேவதை அக்னி. யாகம், ஹோமம் செய்ய அக்னியே முதல் தேவை. அக்னி இல்லாமல் சமைக்க முடியாது. அந்த அக்னிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் வேதகாலத்தில் கார்த்திகையை முதல் நட்சத்திரமாகக் கொண்டனர். ஜோதிட சாஸ்திரம் பிறந்த பின்தான் அசுவினி முதல் நட்சத்திரமானது. முருகன் சிவனின் நெற்றிக்கண்ணான அக்னியில் இருந்து பிறந்தவர் என்பதால், அவருக்கு கார்த்திகை நட்சத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் சிவனுக்கும், ஆடி மாதம் கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரம் முருகனுக்கும் சிறப்பானதாக உள்ளது.