பதிவு செய்த நாள்
16
ஜூலை
2014
12:07
பெங்களூரு: சிவாஜி நகர் தண்டுமாரியம்மன் கோவிலில், வரும் 21ம் தேதி ஆடி கிருத்திகை, 30ம் தேதி ஆடிப்பூரம், ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து 15ம் தேதி வரை, ஆடி பிரம்மோற்சவம் நடக்கிறது. சிவாஜி நகர் தண்டு மாரியம்மன் கோவிலில், ஆடி மாதத்தில் திருவிழாகள் நடத்த தயாராகி வருகின்றனர்.
ஆடி கிருத்திகை: இம்மாதம் 21ம் தேதி வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, காலை, 9:30 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்பட்டு, 11:00 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.மாலை, 6:00 மணிக்கு சஹஸ்ர நாம பூஜை, இரவு, 7:00 மணிக்கு, மஹாமங்களார்த்திக்கு பின்னர், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது.
ஆடிப்பூரம்: இம்மாதம் 30ம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு, காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜை நடக்கிறது. காலையில் சுமங்கலி பெண்களின் குங்கும அர்ச்சனை நடத்தப்படவுள்ளது. ஆகஸ்ட் முதல் தேதி, மாலை, 5:30 மணிக்கு அங்குரார்ப்பணம், இரவு 7:30 மணிக்கு காப்பு கட்டப்படுகிறது. ஆக., 9ம் தேதி மாலை, 5:00 மணிக்கு அம்மன் ஊர்வலம் நடக்கிறது. ஆக., 10ம் தேதி பகலில் தீபாராதனை, மாவிளக்கு செலுத்தப்படுகிறது. 1:30 மணிக்கு கும்ப பூஜை, கூழ் வார்த்தல், இரவு, 7:00 மணிக்கு கும்ப பூஜை, காப்பு அவிழ்க்கப்படுகிறது. 8:00 மணிக்கு மஹாமங்களார்த்தி காண்பிக்கப்படுகிறது. வரும், ஆக., 15ம் தேதி இரவு, 7:00 மணிக்கு சயன உற்சவம், 8:00 மணிக்கு மஹா மங்களார்த்தி காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து 10ம் தேதி வரை தினமும், இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுகின்றன என, ஆலய டிரஸ்டிகள் ஹரிபிரசாத், மோகன ரங்கம், ஜெய்குமார், சீனிவாசன், சரோஜினி பாலசுந்தரம், ஜெகந்நாத பிள்ளை, ஆனந்தன், கோவிந்தராஜ், மதன கோபால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.