கோவை: அன்னுார் அருகே கைகாட்டி, கருப்பராயன் கலாமணி சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவ திருவிழா ஜூலை 29ல் கணபதி வேள்வியுடன் விழா துவங்குகிறது.வரும் 30ம் தேதி காலை பாலாபிஷேகம், பொங்கல் வைத்தல், 9.00மணி; கரகம் எடுத்தல், 11.00 மணி; அப்பன் கோவிலிருந்து வேல் எடுத்து வருதல், மதியம் 12.00மணி; அலங்கார பூஜை, மதியம் 12.30மணி; சுவாமி திருவிளையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அன்னை கலாமணி சுவாமி விழாவுக்கு தலைமை வகிக்கிறார். அன்றைய தினம் காலை 10.00 முதல் மாலை 4.00மணி வரை கோவில் வளாகத்தில் அன்னதானம் (மட்டன் பிரியாணி) வழங்கப்படுகிறது. ஆக., முதல் தேதி மதியம் சங்காபிஷேக பூஜையும், மறுபூஜையும் நடக்கிறது. இவ்விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அன்னுார், மன்னீஸ்வரர் கோவிலிருந்து, கருப்பராயன கலாமணி சுவாமி கோவிலுக்கு இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.