எட்டயபுரம்: சிந்தலக்கரை காளிபராசக்தி தவசித்தர் பீடத்தில் அமைந்துள்ள வெட்காளியம்மன் கோயிலில் இருமுடித் திருவிழாசிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வெட்காளியம்மன் கோயிலில் 30ம் ஆண்டு இருமுடித் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டடு, வேள்வி சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 10 மணிக்கு 42 அடி உயர வெட்காளியம்மனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.