மதுரை: பழங்காநத்தம் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் (ஈஸ்வரன் கோயில்) இன்று காலை 10 மணிக்கு வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த வருஷாபிஷேகம் 12 வது வருஷாபிஷேகம் என்பதால் டி.எஸ். கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. இக்கோயிலில் அருள்பாலிக்கும் காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டால் காசியில் உள்ள விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள். இங்கு பதஞ்சலி முனிவர் தியான பீடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.