பதிவு செய்த நாள்
23
ஜூலை
2014
12:07
திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அருகே, கெரணமல்லூரில் திருக்கரை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கெரணமல்லூர் கிராமத்தில், 1,200 ஆண்டு பழமை வாய்ந்த திருக்கரை ஈஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து அறநிலையத்துறை சார்பில், 15 லட்ச ரூபாய் நிதி மற்றும், பொதுமக்கள் சார்பில், ஐந்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்டு, கடந்த, 16ம் தேதி காலை, 9 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 15 மற்றும், 16ம் தேதி, யாகசாலை அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை உள்ளிட்ட பல்வேறு பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்தை, கோவையை சேர்ந்த முத்து சிவராம ஸ்வாமி அடிகளார் தலைமையில் நடந்தது. கோவில் அறங்காவலர்கள் பெரியசாமி, பலராமன், மார்க்கபந்து, சுப்பிரமணி, அமுதா தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, 48 நாட்களுக்கான மண்டல பூஜை நடந்து வருகிறது.