கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் நந்தி மண்டபம் கட்ட வலியுறுத்தல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2014 12:07
தேனி : வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் நந்தி மண்டபம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் பிரதோஷ வழிபாடு உட்பட முக்கிய வழிபாட்டு தினங்களில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுகின்றனர். கோயில் மிகவும் சிறியதாக உள்ளதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. பிரதோஷ நேரங்களில் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, தனியாக நந்தி மண்டபம் கட்டி அங்கு பிரதோஷ வழிபாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு மண்டபம் கட்ட இந்த சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.. கோயிலுக்குள் ஏதாவது கட்டடப் பணிகள் நடந்தால் மண்டல ஸ்தபதி மற்றும் தலைமை ஸ்தபதிகளின் ஒப்புதல் தேவைப்படும். எனவே இங்கு நந்தி மண்டபம் கட்ட திட்ட அறிக்கை ஸ்தபதிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், அவர்களின் ஆலோசனை பெற்று நந்தி மண்டபம் ஆகம விதிகளின் படி கட்டப்படும், என கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.