வைகுண்டத்தில்பெருமாளின் மனைவியராக ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி வீற்றிருப்பர். இதில் ஸ்ரீதேவியும், நீளாதேவியும் பெருமாளின் பெருமையைப் பாடியதில்லை. பூமிதேவியான ஆண்டாள் மட்டுமே 173 பாசுரங்களால் அவரைப் போற்றிப் பாடியிருக்கிறாள். அதே போலதிருமாலின் கல்யாணவைபவத்தை சீதாகல்யாணம், ருக்மிணி கல்யாணம் என்றெல்லாம் சொல்கிறோம். இதையெல்லாம் விட ஆண்டாள் கல்யாணவைபவமே உயர்ந்தது.சீதாவாக லட்சுமி பிறந்த போது, திருமாலும் ராமராகப் பிறந்திருந்தார். ருக்மிணிக்காக திருமால் கிருஷ்ணராக இருந்தார். ஆனால், ஆண்டாளுக்காகதிருமால் பூலோகத்தில்அவதரிக்கவில்லை. கோயிலில் விக்ரகமாகவே இருந்தார். ஆனால், அந்த விக்ரகவடிவத்திற்குள்ளேயே ஐக்கியமானாள் ஆண்டாள். இது மிகப்பெரிய சாதனை. கல்யாணம்னா இது தான் கல்யாணம் என்று சாதித்துக் காட்டிய பெருமை ஆண்டாளுக்குமட்டுமே உண்டு.