Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ரமலான் சிந்தனைகள்: நல்ல பாதையில் ... மேல்மலையனூரில் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்! மேல்மலையனூரில் அங்காளம்மன் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறில் கயிலை காட்சி: ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2014
10:07

தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், அப்பர் கயிலை காட்சி உற்சவ விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருமுனைபாடி நாட்டில், திருவாமூரில் புகழனாருக்கும், மாதினியாருக்கும் திலகவதியாரின் தம்பியாக பிறந்தவர் அப்பர். சூளை நோய் தவிர்த்து திருநாவுக்கரசரானார். திருநாவுக்கரசர் தலயாத்திரை மேற்கொண்டு கயிலை சென்றார்.இடையில், இறைவன் முனிவர் வடிவில் வந்து, ‘உம்மால் முடியாது, பக்கத்திருந்த பொய்கையில் மூழ்கச் செய்து பழுதில் சீர் திருவையாற்றில் காண்’ என்று பணித்தார். அவ்வாறே, ஆடி அமாவாசை நாளில் ஐயாற்றுத் திருக்குளத்தே வந்து எழுந்தருளினார். கயிலைக் காட்சியளித்த, ஐயாற்று ஆலயத்தைக் கண்டு, ‘மாதர் பிறைக் கண்ணியானை’ என தொடங்கும் பதிகம் பாடி மகிழ்ந்தார். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில், நேற்று முன்தினம் கயிலை காட்சி நடந்து. இதில், காலை காவிரி ஆற்றில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி ஐயாறப்பரை தரிசித்து, ஆலயத்தில் வழிபட்டு சென்றனர். மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. இரவு, அப்பர் சந்நதியில், சிவபெருமான் காட்சி கொடுக்கும், கயிலை காட்சி உற்சவம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிப்பட்டனர்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar