பதிவு செய்த நாள்
04
ஆக
2014
01:08
சாத்தூர் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஆடிப்பெருக்கு என்பதால், கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்திருந்தனர். நேற்று முன்தினம் காலை முதலே சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரை , கார்கள், வேன்கள், லாரிகள், பஸ்கள் மூலமாக இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு
வந்தனர். அதிகாலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பலரும் அக்னிசட்டி, ஆயிரங்கண்பானை , கயிறுகுத்தி , பொங்கல் , முடிகாணிக்கை செலுத்தி அம்மனை வழிப்பட்டனர்.