கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் ஆதிபராசக்தி மன்றத்தின் சார்பில் கஞ்சிக் களைய ஊர்வலம் நடந்தது.கண்டாச்சிபுரம் ஆதிபராசக்தி மன்றத்தின் சார்பில் நடந்த விழாவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி கொடியேற்றி வைத் தார். பின்னர் நிர்மலாகிருஷ்ணன், அய்யம்பெருமாள் ஆகியோர் கூட்டு வழிபாடு நடத்தினர்.மன்ற துணைத் தலைவர் அன்பரசு, சத்யா, செயலாளர் கணபதி ஆகியோர் தலைமையில் கஞ்சிக் களைய ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தமிழ் வேதவார வழிபாட்டுச்சபை தலைவர் பழனியாண்டி துவக்கி வைத்தார்.