கோத்தகிரி : கோத்தகிரி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், வரும் 8ம் தேதி திருவிளக்கு பூஜை நடக்கிறது.மாலை 4:00 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கி, அஷ்ட லட்சுமி கலச பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு, அம்மன் ஊஞ்சல் உற்சவம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது. இவ்விழாவில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப் பட்டுள்ளன.