சிதம்பரம் மேலவீதி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி கோயிலுக்கு ஆந்திர மாநிலத்திலிருந்து வருகை தந்த ஸ்ரீ வாசவி அம்மனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.ஆந்திர மாநிலத்தில் அமையவுள்ள 102 அடி ராஜகோபுரமும். 81 அடி உயரமுள்ள மூலவரும் பிரதிஷ்டை செய்து கின்னஸ் சாதனை செய்யும் விதமாக ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி (ஸ்ரீ வாசவி) கோயிலுக்கு பூர்வாங்கமாக அனைத்து மாநிலங்களுக்கும் சென்று சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள 2 அடி உயரமுள்ள ஸ்ரீவாசவி அம்மன், சிதம்பரம் மேலவீதி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்துக்கு வியாழக்கிழமை வருகை புரிந்தது. இதனை முன்னிட்டு, அம்மனுக்கு ஆடிப்பூர வளையல் காப்பு சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.சம்பந்த தீட்சிதர் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகளை செய்தார்.இந்நிகழ்ச்சியில் ஆர்ய வைஸ்ய சமாஜத்தினர்களும் மற்றும் கோயில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.