தியாகதுருகம்: சிறுவல் கிராமத்தில் மகாமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. தியாகதுருகம் அடுத்த சிறுவல் கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் கடந்த 27ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. தினமும் அலங்கரிக்கப்பட்ட சக்தி கரகம் திருவீதியுலா நடந்தது. கோவிலில் மாரியம்மன் சரித்திர பாடல் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. மோடி எடுத்தல், காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து காத்தவராயன் கழுமரம் ஏறுதல், காளி கோட்டை இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று சாகை வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பெண்கள் மாவிளக்கு தீபம் ஏற்றி அம்மனுக்கு வழிபாடு நடத்தினர்.