உளுந்தூர்பேட்டை: திருநாவலூர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமடத்தில் குருபூஜை மற்றும் திருத்தொண்டர் புராணம் தொடர் சொற்பொழிவு துவக்க விழா நடந்தது. திருநாவலூர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமடத்தில் தம்பிரான் தோழர் அறக்கட்டளை மற்றும் பவானி சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் சார்பில் குருபூஜை மற்றும் திருத்தொண்டர் புராணம் தொடர் சொற்பொழிவு துவக்க விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் ஓதுதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை திருத்தொண்டர் புராண துவக்க விழா நடந்தது. உழவார பணி திருக்கூட்டம் ஸ்ரீசொர்ணாம்பிகை சமேத ஸ்ரீசுகவனேஸ்வரர் சுவாமி பார்த்தசாரதி தலைமை தாங் கினார். ஓதுவா மூர்த்திகள் ராஜ்குமார் மற்றும் திருநாவலூர் தேவார பாடசாலை மாணவர்கள் கடவுள் வாழ்த்து பாடினர். திருநாவலூரன் வரவேற்றார். மேலமங்கலம் மாலயோகி ராம்தாஸ் சுவாமிகள் திருமட குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். ஆண்ட அரசு உழவார திருப்பணிக்குழு மதன்முரளி "தோழமையாக உனக்கு நம்மை தந்தனம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இரவு 7.30 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.