தர்மசாஸ்தா கோயிலில் ஹரிஹரபுத்ர சுவாமி திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2014 12:08
பரமக்குடி தரைப்பாலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் சார்பில் ஸ்ரீ பூர்ணா புஷ்கலா ஸமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர சுவாமி திருக்கல்யாணம் வைபவம் ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.ஸ்ரீ ஹரிஹரபுத்ரன் ஸ்ரீ ஐயப்ப பெருமானுடைய திவ்யகுண லீலைகளை சம்பிரதாய பஜனை பக்தியுடன் முற்றிலுமாக அனுசரித்து சங்கீர்த்தனம் நடத்தி வருவது சமீபகாலமாக பிரபலமடைந்து வருகிறது.அதன் அடிப்படையில் பகவானின் கல்யாண குண வைபவங்களை நாமஸங்கீர்த்தனம் செய்வதன் மூலம் பக்தி வளர்கிறது. இதுபோன்ற திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகளில் ஆடி, பாடி அனுபவிக்கும் பக்தர்களில் பெரும்பாலன பெண்களுக்கு திருமண காரியங்கள் நல்லமுறையில் நடந்து வருகிறது.இந்த நம்பிக்கையின் அடிப்படையில் பல இடங்களில் உள்ள திருத்தலங்களில் சீதா கல்யாணம், ராதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம் போன்ற உத்ஸவங்களும், சிவாஷ்டபதியை அனுசரித்து மீனாட்சி திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன. கேரளத்தில் ஆரியங்காவு, தகழி போன்ற ஆலயங்களில் சாஸ்தா கல்யாண உற்ஸவம் நடத்தப்படுகிறது. அதேபோல் ஸ்ரீ பூர்ணா புஷ்கலா ஸமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர சுவாமியின் திருக்கல்யாணம் பாகவத சம்ரதாயப்படி பக்தி பரவசத்துடன், ஆடிப்பாடி, சென்னையைச் சேர்ந்த சீனிவாச ராகவன் தலைமையிலான ஐயப்ப பக்தர்களால் பரமக்குடி தரைப்பாலம் தர்மசாஸ்தா ஆலயத்தில் நடத்தப்பட்டது.