வள்ளிமலை ஜைனர் குகையில் அகிம்சை நடை குழுவினர் வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2014 12:08
வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவில் மலையின் மேல் ஜைனர் குகை அமைந்துள்ளது. இந்த குகை கி.பி.8–ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ஜைனமத சிற்பங்கள் உள்ளன. தொண்டை மண்டலத்தில் உள்ள புராதன சிற்பங்களை ஒவ்வொரு இடமாக மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று வழிபட்டு மக்களிடையே புராதன சின்னங்களின் மேன்மையை கொண்டு செல்லும் விழிப்புணர்வு அகிம்சை நடை பயண குழுவினர் நேற்று வள்ளிமலைக்கு வந்தனர். வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவில் மலையின் மேல் உள்ள ஜைனர் குகையில் அமர்ந்து வழிபாடு செய்தனர்.பின்னர் அங்கு நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் கல்வெட்டியல் துறை முன்னாள் இயக்குநர் வெங்கடேசன், ஜைனர் குகையின் சிறப்புகள், தொன்மைகள் குறித்து குழுவினருக்கு விவரித்து பேசினார்.அதில், மேல்சித்தாமூர் திகம்பர சமண மடாதிபதி லட்சுமி சேனக பட்டாச்சாரியார், வேலூர் அருங்காட்சியக காப்பாளர் காந்தி, புதுக்கோட்டையிலிருந்து வந்த பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பாளர் மணி, அகிம்சை நடை குழுவின் அமைப்பாளர் ஸ்ரீதரன், தொல்லியல் துறை பேராசிரியர் ரமேஷ் உள்பட அகிம்சை நடை குழுவினர் கலந்து கொண்டனர்.