ஆடிப் பெருக்கை முன்னிட்டு ராசிபுரம் ஸ்ரீநித்ய சுமங்கலி மாரியம்மனுக்கு வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.மாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், திருநீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு வெள்ளிக்காப்பு சாத்தப்பட்டது. இந்த அபிஷேக அலங்காரத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல, ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோயில், ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயம் போன்ற கோயில்களில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.