ஆடிப்பெருக்கு விழாவையொட்டி அரவக்குறிச்சி அருகேயுள்ள ரெங்கமலை உச்சியிலுள்ள மல்லீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 12 கிமீ தூரத்தில் கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புகழ் பெற்ற ரெங்கமலை உள்ளது. இம்மலை அடிவாரத்திலிருந்து 3 கிமீ தூரம் மலைப்பாதையில் நடந்து சென்றால் உச்சியில் புகழ்பெற்ற மல்லீஸ்வரர் கோயில் உள்ளது.ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இந்தக் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.அரவக்குறிச்சி, கரூர், வேடசந்துர், இடையகோட்டை, ஒட்டன்சத்திரம், மார்க்கம்பட்டி, திண்டுக்கல் மற்றும் சுற்றுப்பகுதி ஊர்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைப்பாதையில் நடந்து வந்து தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ரெங்கமலை மல்லீஸ்வரர் கோயில் திருப்பணிக் குழுவினர் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அரவக்குறிச்சி போலீஸார் மற்றும் திண்டுக்கல் சரக வனத்துறையினர் செய்தனர்.